சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ‘லால் சலாம்’ என்ற இப்படத்தின் பூஜை இன்று (நவம்பர் 5) சென்னையில் நடைபெற்றது.