சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பிரமாண்ட பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ரஜினி பிறந்தநாள்: ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்! - ரஜினி பிறந்தநாள்
சென்னை: ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. தென்சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், கதாசிரியர் கலைஞானம், இயக்குநர்கள் முத்துராமன், வாசு, ரவிக்குமார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை மீனா, கராத்தே தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் கெளரவிக்கப்பட்டனர்.