தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் ராகவா லாரன்ஸுக்கு மக்கள் மருத்துவர் விருது!

சென்னை: ராயபுரம் மக்கள் மருத்துவரின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி, நடிகர் ராகவா லாரன்ஸுக்கு விருது வழங்கப்பட்டது.

நடிகர் ராகவா லாரன்ஸுக்கு மக்கள் மருத்துவர் விருது!
நடிகர் ராகவா லாரன்ஸுக்கு மக்கள் மருத்துவர் விருது!

By

Published : Dec 23, 2019, 7:27 PM IST

தாயன்பு ட்ரஸ்ட் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சமூக சேவைகள் செய்த பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் பெயரில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் பேசுகையில், மக்கள் சேவைக்காக பெறும் விருது ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், ஒருபுறம் பொறுப்பை அதிகப்படுத்துவதாகவும் இருக்கிறது என்றார்.

மக்கள் சேவைக்காக சென்ற வருடம் ராகவா லாரன்ஸ் அன்னை தெரசா விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்த கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய யானைகள்!

ABOUT THE AUTHOR

...view details