நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திமுக 103 இடங்களில் வென்றுள்ளது. 53 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 35 இடங்களில் முன்னிலையும், 42 இடங்களில் வெற்றியும் கண்டுள்ளது. இவ்விரு கட்சிகளைத் தவிர்த்து போட்டியிட்ட அமமுக, மநீம, நாதக உள்ளிட்ட பிற கட்சிகள் இன்னும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
தொடர்ந்து கோவை தெற்கு தொகுதியில் முன்னிலை வகித்து வந்த மநீம தலைவரும், வேட்பாளருமான கமல் ஹாசன் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். கமல் ஹாசனை விட பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துவருகிறார்.