சென்னை:பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி (57) இன்று (பிப்.19) அதிகாலை மாரடைப்பால் காலமானார். நேற்றிரவு வண்டலூர் அருகே மேலக்கோட்டையூர் சிவன் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி சாமி தரிசனம் செய்துவிட்டு, வீடு திரும்பிய போது மயில்சாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர், நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், "எனது இயக்கத்தில் மயில்சாமி நடித்துள்ளார். அவரது மரணம் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய நபர்.