சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகர் கவினுக்கு, மோனிகா எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக, கடந்த சில நாட்களுக்கு முன், இணையத்தில் செய்திகள் வெளிவரத் தொடங்கின. இதுகுறித்து கவின் தரப்பினரும் இந்த செய்தியை உறுதி செய்த நிலையில், இது காதல் திருமணம் என்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் ஆகஸ்ட்20 இன்று திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) நடிகர் கவினுக்கும் மோனிகாவுக்கும் சென்னையில் திருமணம் இனிதே நடந்து முடிந்து உள்ளது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ இவர்களது திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் கவின், தனது ட்விட்டர் பக்கதில் தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தற்போது கவினின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை அள்ளி வருகின்றன. ஏராளமான திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என கவின் - மோனிகா தம்பதிக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
சின்னத்திரை டூ வெள்ளித்திரை
நடிகர் கவின் , சிவகார்த்திகேயன் போலவே விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார். அதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படத்தில் நடித்தார்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் இளைஞர்களின் ஆதரவை பெற்றார். அதனை தொடர்ந்து சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர். லிஃப்ட் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அந்த படம் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மேலும் இவர் நடித்த டாடா திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. மிகச் சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் அனைவரும் விரும்பும் படமாக அமைந்தது. மேலும் இதில் கவினின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. நடிகர் கவின் தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க:"மின்னும் தண்ணீரில் புதிய காதல்" - சிகிச்சைக்கு மத்தியில் போஸ்ட் வெளியிட்ட சமந்தா!