சென்னை:தமிழ் , மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் வில்லன் நடிகராக நடித்தவர் கசன் கான். தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு பிரசாந்த் நடித்த செந்தமிழ்ப்பாட்டு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு பல்வேறு தமிழப் படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார். மேட்டுக்குடி, பிரியமானவளே உள்ளிட்ட படங்களில் இவரது வில்லன் நடிப்பு பேசப்பட்டது. விஜய்யின் பத்ரி படத்திலும் இவர் நடித்துள்ளார். இவரது முரட்டு வில்லன் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
மேலும் விஜயகாந்த் நடித்த பல படங்களில் தீவிரவாதி கதாபத்திரத்தில் நடித்துள்ளார். விஜயகாந்த் நடிப்பில் வெற்றி படங்களான வானத்தை போல, வல்லரசு, என் ஆசை மச்சான் ஆகிய படங்களின் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்தார். விஜயகாந்த் நடிப்பில் வெளியான சேதுபதி ஐபிஎஸ் படத்தில் இடம்பெற்ற சாத்து நட சாத்து என்ற பாடலில் இவரது ரியாக்ஷன்கள் மிகவும் பிரபலம்
மலையாளத்தில் சிஐடி மூசா என்ற திரைப்படம் இவர் நடித்த படங்களில் மிக பிரபலமான படம். முறை மாமன் படத்திலும் இவரது வில்லத்தனம் ரசிக்கப்பட்டது. பிரியமானவளே படத்தில் சிம்ரனை விரும்பும் கதாபாத்திரத்தில் நடித்த இவரது மேனரிஸமும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: HBD GV Prakash: வெயிலோடு விளையாடி முதல் அடியாத்தி இது என்ன பீலு வரை.. இசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ் பர்த்டே ஸ்பெஷல்!