தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடு திரும்பினார் சூர்யா - நடிகர் கார்த்தி ட்வீட்! - actor suriya positive for corona

கரோனா சிகிச்சை எடுத்துக்கொண்ட நடிகர் சூர்யா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் என்று அவரது தம்பி நடிகர் கார்த்தி ட்வீட் செய்துள்ளார்.

actor-karthi-tweet
actor-karthi-tweet

By

Published : Feb 11, 2021, 6:25 PM IST

கரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் என்று நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஏழாம் தேதி தெரிவித்திருந்தார்.

அதில் “கரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி ட்விட்

இந்நிலையில், சூர்யாவின் உடல்நிலை குறித்து அவரது தம்பியும் நடிகருமான கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ”கரோனா சிகிச்சை முடிந்து அண்ணன் வீடு திரும்பியுள்ளார். அவர் சிறிதுநாள்கள் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வார். அனைவரது பிரார்த்தனைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:

நேரடியாக ஸ்டார் விஜய் டிவியில் வெளியாகும் சமுத்திரகனி நடித்த 'ஏலே'

ABOUT THE AUTHOR

...view details