தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் கார்த்தி ரசிகர்களுக்கு விடுத்த அன்பிற்குரிய வேண்டுகோள்! - happy birth day karthi

சென்னை: நடிகர் கார்த்தி தனது பிறந்த நாளில் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி

By

Published : May 25, 2021, 3:25 PM IST

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர் கார்த்தி இன்று (மே 25) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்குத் திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், தனது பிறந்த நாள் குறித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவை,

நடிகர் கார்த்தியின் வேண்டுகோள்

'அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம். இந்த கரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது. அரசாங்கமும் மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, 'மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல்' போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி, தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இதுவே இந்தப் பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் அன்புப் பரிசாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த வேண்டுகோள் கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:'தமிழ் மக்கள் மீது அன்பும் மரியாதையும் வைத்துள்ளோம்'

ABOUT THE AUTHOR

...view details