தமிழ்நாட்டில் கரோனா நோயின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
கோவிட் குறித்தான சந்தேகங்கள்: மருத்துவரிடம் தெளிவுப்படுத்திக்கொண்ட கார்த்தி - சென்னை மருத்துவ கல்லூரி
சென்னை: கோவிட் குறித்தான சந்தேகங்கள், கேள்விகளுக்கு பொதுமக்கள் சார்பாக நடிகர் கார்த்தி ராஜீவ் காந்தி அரசு மருத்துவனை தலைவரிடம் நேரலை மூலம் கேட்டு தெளிப்படுத்திக்கொண்டார்.
கோவிட் குறித்தான சந்தேகங்கள், கேள்விகள் பொதுமக்களிடம் நிறைய நிலவிவருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் சார்பாக நடிகர் கார்த்தி சென்னை மாநகராட்சி ஆணையம் ஏற்பாடு செய்த நேரலை மூலம் சென்னை மருத்துவக் கல்லூரி - ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தலைவர் Dr. தேரணிராஜனிடம் கேட்டு தெளிவுப்படுத்திக்கொண்டார். நேற்று (மே 12) கரோனா தொற்று தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயை நடிகர் சிவகுமார் குடும்பத்தினர், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.