தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு - நடிகர் கமல் ஹாசன்

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலராக கமல்ஹாசன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலராக கமல் ஹாசன் நியமனம்
தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலராக கமல் ஹாசன் நியமனம்

By

Published : Mar 23, 2022, 7:57 PM IST

சென்னை:தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கையானது நிறுத்திவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கடந்த ஞாயிறன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது.

கமல்ஹாசன் நியமனம்:இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலராக கமல்ஹாசன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் நிர்வாக அறங்காவலராக, நடிகர் நாசர் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை செயல்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, பூச்சிமுருகன், கமல்ஹாசன், ராஜேஷ்,
கோவை சரளா, சச்சு, லதா சேதுபதி ஆகியோர் செயல்படுவார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விருதுநகர் பாலியல் வழக்கு: 'விரைந்து தண்டனை பெற்றுத் தருவோம்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details