தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய ஒப்பந்தப் பணியாளர் நீக்கம்: மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ்

சென்னை: நடிகர் கமல் ஹாசன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளரை பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? என சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணையம்
மனித உரிமைகள் ஆணையம்

By

Published : Jul 23, 2020, 5:02 PM IST

கரோனா காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல் ஹாசன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் வினோத்குமார் என்பவர் நோட்டீஸ் ஒட்டினார். பின்னர் உயர் அலுவலர்கள் அந்த நோட்டீசை அகற்றும்படி அறிவுறுத்தியதை அடுத்து, அந்த நோட்டீஸ் உடனடியாக அகற்றப்பட்டது. இதன் காரணமாக வினோத்குமாரை பணி நீக்கம் செய்துள்ளதாக சுகாதார ஆய்வாளர் முத்துரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

ஆனால், மண்டல அலுவலரும், இணை ஆணையரும் விசாரணை நடத்தி, தன்னை பணியில் சேரும்படி கூறிய போதும், தன்னை பணியில் சேரவும், வருகை பதிவில் கையெழுத்திடவும் சுகாதார ஆய்வாளர் அனுமதி மறுப்பதாக கூறி, வினோத்குமார் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை ஜெயசந்திரன், இதுசம்பந்தமாக நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details