தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Maamannan: படத்தைப் பாராட்டிய கமல்.. நன்றி தெரிவித்த படக்குழு! - உதயநிதி ட்விட்டர்

மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாக உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாமன்னன் பார்த்து வாழ்த்திய கமல்
மாமன்னன் பார்த்து வாழ்த்திய கமல்

By

Published : Jun 29, 2023, 7:02 AM IST

சென்னை:இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாமன்னன். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்து உள்ளனர். மாமன்னன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து உள்ளார். இவரது இசையில் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், முன்னதாக மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ், தேவர் மகன் படம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவும் தேவர் மகன் படத்தின் நாயகனான கமல்ஹாசன் முன்பே இயக்குநர் மாரி செல்வராஜ் விமர்சித்து பேசியது விவாதத்திற்கு உள்ளானது. அதனைத் தொடர்ந்து பேசிய கமலும் அதற்கு விளக்கமோ, மறுப்போ அளிக்கவில்லை.

ஆனால், இந்த விமர்சனத்தால் மாரி செல்வராஜை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்யத் தொடங்கினர். மீம்ஸ் மூலமும் அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. இது ஒருபுறம் இருக்க, மாமன்னன் படத்தைப் பார்த்து ரசித்தவர்கள் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். நடிகர் தனுஷ் படத்தை பார்த்து விட்டு அனைவரையும் பாராட்டினார். இந்த நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனும் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜை வெகுவாக பாராட்டி உள்ளார்.

இதையும் படிங்க:வாங்கி கட்டிய பின்னர் திருந்திய லியோ படக்குழு.. 'நா ரெடி' பாட்டில் எச்சரிக்கை வாசகம் சேர்ப்பு!

இந்தப் படத்தை குறித்து அவர், “மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை. என் கருத்திற்கு வலிமை சேர்க்கும்
மாமன்னனுக்கு வாழ்த்துகள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதற்கு மாமன்னன் படத்தின் கதாநாயகனான உதயநிதியும் நன்றி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து உதயநிதி, “மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசனுக்கு மாமன்னன் படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறி உள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜும் “பெரும் ப்ரியத்தோடும், தீரா நம்பிக்கையோடும், என்னையும், என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக்கொண்ட கலைஞானி கமல்ஹாசனுக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க:திரையரங்குகளில் தெறிப்புத் தருணங்கள் இருக்கும் - மாமன்னன் பார்த்து பாராட்டிய நடிகர் தனுஷ்!

ABOUT THE AUTHOR

...view details