தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மு.க ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள் - கமல்ஹாசன்! - tamilnadu election 2021

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan
கமல்ஹாசன்

By

Published : May 3, 2021, 9:47 AM IST

தமிழ்நாடு தேர்தலில் திமுக பெரும்பான்மையான வெற்றியை பெற்றுள்ளதால் அக்கட்சியின் தலைவரான மு.க. ஸ்டாலினுக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில், பெருவெற்றி பெற்றுள்ள மு.க ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் வாழ்த்துப் பதிவு

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி'- ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details