தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கமல்ஹாசனின் Watch பட்டியலில் Rolex-ஐ தொடர்ந்து Panerai - ஷங்கருக்கு கமல்ஹாசன் அளித்த வாட்ச் விலை

இயக்குநர் ஷங்கருக்கு, Panerai பிராண்டின் விலையுயர்ந்த கைக் கடிகாரம் ஒன்றையும் பரிசளித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 28, 2023, 6:50 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவும் பிரமாண்ட இயக்குநராகவும் அறியப்படுபவர் இயக்குநர் ஷங்கர் (Director Shankar). இவரது அனைத்து படங்களும் பிரமாண்டமாகவும், சமூக அக்கறை உள்ள படமாகவும் இருக்கும். இன்று வரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக இவர் இயக்கிய 2.O உள்ளது. இவரது இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த படம் இந்தியன். இதில் கமல்ஹாசன் (Kamal Haasan) இரட்டை வேடத்தில் கலக்கியிருப்பார். லஞ்சம் வாங்குவது பற்றி இப்படம் பேசியது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். அதற்கு இந்தியன் 2 (Indian 2) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசன் மீண்டும் இந்தியன் தாத்தா வேடத்தில் கலக்க உள்ளார். பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை லைகா (Lyca Productions) நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் (Redgiant Movies) இணைந்து தயாரிக்கின்றன.

காஜல் அகர்வால் (Kajal Aggarwal), சித்தார்த் (Siddharth), ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh), பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar), எஸ்ஜே சூர்யா (S. J. Suryah) எனப் பெரும் நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான போதும், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே படப்பிடிப்புப் பணிகள் தொடங்கின. அதன் பிறகும், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக பணிகள் தாமதமானது. இதனையடுத்து, அண்மையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. தைவான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும், சென்னையில் செட் அமைத்தும் படப்பிடிப்பு நடந்தது. தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்புப் பணிகள் நடப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இப்படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் இயக்குநர் ஷங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி. அன்பன் கமல்ஹாசன்" என்று பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இயக்குநர் ஷங்கருக்கு, Panerai பிராண்டின் விலையுயர்ந்த கைக் கடிகாரம் ஒன்றையும் பரிசளித்துள்ளார். விக்ரம் (Vikram) பட வெற்றியின் போது ரோலக்ஸ் என்ற கதாபத்திரத்தில் தனது அசுர நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் சூர்யாவுக்கு (Suriya) கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச் (Rolex watch) பரிசளித்தார்.

தற்போது அந்த வரிசையில் இயக்குநர் ஷங்கருக்கும் Panerai பிராண்டின் விலையுயர்ந்த வாட்சை பரிசளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கடிகாரத்தின் உயர்ந்த வாட்சின் விலை, இந்திய ரூபாயின் மதிப்பில், ரூ.7,65,300 ஆகும்.

இதையும் படிங்க:திரையரங்குகளில் தெறிப்புத் தருணங்கள் இருக்கும் - மாமன்னன் பார்த்து பாராட்டிய நடிகர் தனுஷ்!

ABOUT THE AUTHOR

...view details