தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓட்டுநர் ஷர்மிளாவை கார் உரிமையாளராக்கிய கமல்ஹாசன் - கார் பரிசாக வழங்கிய கமல்ஹாசன்

கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கமல்ஹாசன் கார் ஒன்றினைப் பரிசாக வழங்கி உள்ளார்.

Actor Kamal Haasan gifted a car to Coimbatore female driver Sharmila
கோவை பெண் ஓட்டுநருக்கு கார் பரிசாக வழங்கிய கமல்ஹாசன்

By

Published : Jun 26, 2023, 12:31 PM IST

Updated : Jun 26, 2023, 1:16 PM IST

ஓட்டுநர் ஷர்மிளாவை கார் உரிமையாளராக்கிய கமல்ஹாசன்

சென்னை:கோவையில் தனியார் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றிய இளம்பெண் ஷர்மிளாவிற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கார் ஒன்றினைப் பரிசாக வழங்கி உள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் இயங்கி வந்த தனியார் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றிய இளம்பெண் ஷர்மிளா. ஆட்டோ ஓட்டுநரான இவரது தந்தையைப் பார்த்து ஓட்டுநராக அவதாரம் எடுத்தார், ஷர்மிளா. ஏப்ரல் மாதம் முதல் இவர் பணியைத் துவங்கிய நிலையில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனார்.

மேலும் கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்று கூறப்படும் இவருடன் பேருந்தில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் பயணித்தார். சமீபத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி ஓட்டுநர் ஷர்மிளாவின் பேருந்தில் பயணித்தார்.

இதையும் படிங்க: கோவையின் ரூட்டு தலைவி.. பேருந்து ஓட்டும் ஷர்மிளா!

கனிமொழி பேருந்தில் பயணித்த தினத்தன்று ஏற்பட்ட சில சச்சரவுகள் காரணமாக ஓட்டுநர் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், ஓட்டுநர் ஷர்மிளா தானாகத் தான் பணியில் விலகுவதாக தெரிவித்ததாக பேருந்தின் உரிமையாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

கோவை பெண் ஓட்டுநருக்கு கார் பரிசாக வழங்கிய கமல்ஹாசன்

ஓட்டுநர் ஷர்மிளா பணியை இழந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்தும் அவருக்கு உதவிக் கரங்கள் எழுந்தன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஓட்டுநர் ஷர்மிளா அவரது குடும்பத்தினருடன் சந்தித்தார்.

அப்போது கமல்ஹாசன், ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் கார் ஒன்றினைப் பரிசாக வழங்கினார். இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி முதல், பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர், ஷர்மிளா.

பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்திய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை. கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவோராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார்.

ஆண்டாண்டு காலமாய் அடக்கிவைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து தரணி ஆளவருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: Bus Driver Sharmila: கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா டிஸ்மிஸ்.. பஸ் உரிமையாளர் விளக்கம் என்ன?

Last Updated : Jun 26, 2023, 1:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details