தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாளை முன்னிட்டு ‘சைரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - சைரன்

actor Jayam Ravi Birthday: நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘சைரன்’ படத்தின் புதிய போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

சைரன்
siren

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 7:56 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்கள் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி பிரமாதமாக நடித்திருந்தார். கடைசியாக இவரது நடிப்பில் அகிலன் திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் ஜெயம் ரவி இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிலையில், “ஹோம் முவி மேக்கர்ஸ்” நிறுவனம் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், ஆன்டனி பாக்யராஜ் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் சைரன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஆன்டனி பாக்யராஜ். இவர் இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார். மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது.

இதையும் படிங்க:‘நிதி இல்லை என்பதால் தான் நடிகர் சங்க கட்டடம் கட்ட முடியவில்லை’ - தென்னிந்திய நடிகர் சங்கம்!

நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் “சைரன்” பட ஃப்ரீபேஸ் லுக் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு அருமையான விருந்தாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க:'RRR' படத்தைப் பாராட்டிய பிரேசில் அதிபர் லூலா - நன்றி தெரிவித்த ராஜமௌலி!

ABOUT THE AUTHOR

...view details