தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கலெக்டர்' ஆக ஆசைப்பட்ட நடிகைக்கு 'கை' கொடுத்த ஜெய் - kalavani

'களவாணி’ படத்தில் நடிகர் விமலுக்கு தங்கையாக நடித்த மனிஷாவின் கலெக்டர் ஆக வேண்டும் எனும் கனவை நிறைவேற்ற நடிகர் ஜெய் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

கலெக்டர் ஆக ஆசைப்படும் நடிகைக்கு கை கொடுத்த ஜெய்
கலெக்டர் ஆக ஆசைப்படும் நடிகைக்கு கை கொடுத்த ஜெய்

By

Published : Jun 23, 2022, 3:13 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மாணவர்கள் படிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஜெய் இப்போது முன் வந்துள்ளார். 'களவாணி' படத்தில் நடிகர் விமல் தங்கையாக படு சுட்டியாக நடித்தவர், மனிஷா பிரியதர்ஷினி. இவர் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடித்து வருகிறார். மேலும் படிப்பிலும் சிறந்து விளங்குகிறார்.

தற்போது சட்டப்படிப்பான LLB இறுதி ஆண்டு படித்து வருகிறார். அதிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். அவர் அன்னையின் கனவு தன் மகளை கலெக்டர் ஆக்க வேண்டும் என்பது தான் எனக் கூறப்படுகிறது. தற்போது , UPSC, IAS ஆரம்ப கட்டப்படிப்பிற்கு தனக்கு புத்தகங்கள் வாங்கித் தருமாறு நடிகர் ஜெய் இடம் உதவி கேட்க, அவரும் அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொடுத்து,

”நன்கு படித்து கலெக்டர் ஆக வேண்டும். மேற்கொண்டு எல்லா உதவிகளையும் செய்வேன்”, என்று வாழ்த்தியுள்ளார். இதற்காக நடிகர் ஜெய் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார், மனிஷா பிரியதர்ஷினி.

இதையும் படிங்க:’இரண்டு ராஜாக்கள்’ இசை கூட்டணியில் உருவாகும் வெங்கட் பிரபு திரைப்படம்!!

ABOUT THE AUTHOR

...view details