ட்ரெண்டாகும் தனுஷின் பிறந்தநாள் டிபி - #DhanushBDayCommonDP
நடிகர் தனுஷ் வரும் ஜூலை 28ஆம் தேதி தனது 37ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்கள் ஒரு பொதுவான முகப்பு படத்தை உருவாக்கி ட்விட்டரில் #DhanushBDayCommonDP என்ற ஹேஸ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் தனுஷ் வரும் ஜூலை 28ஆம் தேதி தனது 37ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரது ரசிகர்கள் தனுஷ் நடித்த படங்களான புதுக்கோட்டை, ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, அசுரன், ஜகமே தந்திரம், வடசென்னை, மாரி, பொல்லாதவன், காதல்கொண்டேன் ஆகியவற்றின் கதாபாத்திரங்களைக் கொண்டு பொது முகப்பு படத்தை உருவாக்கி அதை ட்விட்டரில் #DhanushBDayCommonDP என்ற ஹேஸ்டேக்கில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.