தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புற்று நோய் இல்லாத சமூகத்தை நோக்கி பயணிப்போம் - நடிகர் தாமு

பேடர்சன் கேன்சர் சென்டர் மூலமாக மாணவர்களுக்கான புற்று நோய் குறித்து விழிப்புணர்வு, முகாம்கள் நடத்துவது பாராட்டுக்குரியது என நடிகர் தாமு தெரிவித்துள்ளார்.

Dhamu
Dhamu

By

Published : Jun 22, 2021, 3:40 PM IST

சென்னை: வடபழனியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களால் 2003ஆம் ஆண்டு பேடர்சன் கேன்சர் சென்டர் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சென்டர் இன்று (ஜூன்.22) 19ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதனையடுத்து இந்த சென்டரில், புற்றுநோய் மருத்துவ நிபுணர் விஜயராகவன் தலைமையில், புற்றுநோய் இல்லாத முழுமையான சமூகத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்.பொன்ராஜ், நடிகர் தாமு, 'காக்கா முட்டை' பட நடிகர் விக்னேஷ் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர். இதில் தாமு பேசுகையில், டாக்டர் விஜயராகவன் பேடர்சன் மூலமாக மாணவர்களுக்கான புற்று நோய் குறித்து விழிப்புணர்வு, முகாம்கள் நடத்துவது பாராட்டுக்குரியது. ஒவ்வொரு கிராமங்களாக தத்தெடுத்து உடல் பரிசோதனை செய்து புற்றுநோய் இருக்கும் நபர்களுக்கு இலவச சிகிச்சை அளித்து குணப்படுத்தி வருகிறார்கள்.

நடிகர் விவேக்கின் உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தும் தாமு

இதேபோல் இந்த 18 வருடங்களில் பல்லாயிரக்கணக்கான புற்று நோயாளிகளை இந்த பேடர்சன் கேன்சர் சென்டர் (PCC) மூலமாக குணப்படுத்தி வருகிறார்கள். இவர்களின் சமூக சேவையை நான் மனதார பாராட்டுகிறேன். மேலும் புற்று நோய் இல்லாத சமுதாயத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் பேடர்சன் கேன்சர் சென்டர்(PCC) சேவையை சரியான முறையில் மக்கள் பயன்படுத்தி நலமடைய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ஐம்பது லட்சம் மாணவர்களுக்கு கல்விச் சேவை: நடிகர் தாமு இலக்கு

ABOUT THE AUTHOR

...view details