திரை உலகில் காமெடி நடிகராக அறியப்படுபவர் கவுண்டமணி. கடந்த சில ஆண்டுகளாகவே இணையதளங்களில் அடிக்கடி கவுண்டமணி மரணம் அடைந்தார் என்ற செய்தி வெளியாகி பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் நடிகர் கவுண்டமணி மரணமடைந்துவிட்டதாக
யூடியூப்பில் வதந்தி பரப்பப்படுகிறது.
வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - நடிகர் கவுண்டமணி - கவுண்டமணி குறித்த அவதூறுகள்
சென்னை: அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் கவுண்டமணி எச்சரித்துள்ளார்.
இது குறித்து கவுண்டமணி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கவுண்டமணி குறித்து வெளியாகும் செய்தி உண்மை அல்ல, அவர் நலமுடன் இருக்கிறார். புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தவறான செய்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. யூடியூப்பில் உள்ள கவுண்டமணி பற்றிய தவறான தகவலை உடனடியாக நீக்கவில்லை என்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.