சென்னை:மேடை நாடக கலைஞரான பெஞ்சமின் சேரன் இயக்கத்தில் வெளியான ‘வெற்றிக்கொடிகட்டு’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் வடிவேலுவை இவர் திட்டும் நகைச்சுவைக் காட்சி மிகவும் பிரபலமானது. அதைத்தொடர்ந்து திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பராகவும் நடித்து குணச்சித்திர நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 40க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் பெஞ்சமின் சேலத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்கள் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர், அந்த மருத்துவமனையில் மேல் அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால் பெங்களூரு நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.