சென்னை: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், நடிகர் பாலா மற்றும் அமுதவாணன். இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களுக்கு ஆங்காங்கே தேவைப்படும் பல நல உதவித் திட்டங்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் பாலா தனது சொந்த பணத்தின் மூலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கினார். மேலும், மலைவாழ் கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட உதவிகளும் செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில், ஆட்டோ ஒன்றை முற்றிலும் இலவசமாக பொதுமக்களுக்காக வழங்கியுள்ளார். ஆட்டோவில் தனியாக ஓட்டுநர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அதில் (9176878751) தொலைபேசி எண் ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்கள், தொலைபேசி எண் மூலம் அழைத்து, இந்த ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆட்டோவிற்கான செலவு மற்றும் ஓட்டுநருக்கான செலவை மாதம்தோறும் பாலா மற்றும் அமுதவாணன் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து நடிகர் பாலா பேசும் போது, “ஒருநாள் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதியவர் ஒருவர், மருத்துவமனைக்கு ஆட்டோவில் செல்ல பணமில்லாமல் பேருந்தில் சிரமப்பட்டு ஏறுவதைக் கண்டேன்.