தமிழ்நாடு

tamil nadu

நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

சென்னை: சங்க விதிகளின் படி சங்க உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டதால், அதற்கான அறிவிப்பை ரத்து செய்ய முடியாது என விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

By

Published : Oct 31, 2019, 7:55 PM IST

Published : Oct 31, 2019, 7:55 PM IST

ETV Bharat / state

நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

Chennai hc

நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில், விஷால் அணிக்கு ஆதரவான தொழில்முறை சாராத உறுப்பினர்கள், தொழில்முறை உறுப்பினராகவும் எதிரானவர்கள் தொழில்முறை உறுப்பினரிலிருந்து தொழில்முறை சாராத உறுப்பினர்களாகவும் மாற்றப்பட்டதாக மனுதாரர்கள் சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், யாரையும் பழி வாங்கும் நோக்கத்துடன் செயல்படாமல் பலமுறை நோட்டீஸ் அனுப்பிய பின்னர் மனுதாரர்கள் தொழில்முறை சாராத உறுப்பினராக மாற்றப்பட்டனர்.

61 பேரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க பலமுறை உத்தரவிட்டும் ஆஜராகாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சங்க விதிகளின்படி உறுப்பினர்களை நீக்கவும் மாற்றவும் செயற்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. செயற்குழு முடிவை எதிர்த்து பொதுக்குழுவில் சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்திருக்கலாம்.

நிர்வாகிகள் மீது அதிருப்தி ஏற்பட்டால் 300 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு பொதுக்குழுவில் சமர்ப்பித்து புதிய 10 சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவும் அதிகாரம் உள்ளது. 2018 அக்டோபரில் நடந்த பொதுக்குழுவில் தேர்தலை நடத்துவது, வழக்கை நடத்துவது, அலுவலகப் பணி, சங்க கணக்குகளை நிர்வகிப்பது குறித்து கால அவகாசம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2017, 2018ஆம் ஆண்டு நடந்த இரண்டு பொதுக்குழுவில் சங்க உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதன்பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது. உறுப்பினர்கள் மீதான நடவடிக்கையை தவிர்க்க ஆதார், குடும்ப அட்டை, உறுப்பினர் அட்டையை நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும் என பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் பொதுக்குழுவில் ஆறு மாதம் கால நீட்டிப்பு செய்யப்பட்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் சங்க விதிகளின்படி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய முடியாது என்பதால் மனுதாரர்கள் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கில் அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details