தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிறந்த நாள் கொண்டாட்டம்: குடும்பத்துடன் செல்ஃபி எடுத்து வெளியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்! - Actor Vijayakanth

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று (ஆக. 25) தனது 68ஆவது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

பிறந்த நாள் கொண்டாட்டம்: குடும்பத்துடன் செல்பி எடுத்து வெளியிட்ட தேகுதிக தலைவர் விஜயகாந்த்!
பிறந்த நாள் கொண்டாட்டம்: குடும்பத்துடன் செல்பி எடுத்து வெளியிட்ட தேகுதிக தலைவர் விஜயகாந்த்!

By

Published : Aug 25, 2020, 11:23 AM IST

நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று (ஆக. 25) தனது 68ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

இதனை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்து, அவர் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். இது குறித்தான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜயகாந்த் பகிர்ந்துள்ளார். அதில், மனைவி, இரு மகன்களுடன் சிறிதாய் புன்னகைத்து போஸ் கொடுத்துள்ளார்.

இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதில் பார்ப்பதற்கு விஜயகாந்தின் உடல்நிலை சற்று தேறியுள்ளதாகவே தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்தின் பிறந்தநாள் வெகுவிமரிசையாக, அவரது தொண்டர்களால் கொண்டாடப்படும். விஜயகாந்தும் தனது பிறந்த நாளன்று ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...புதுச்சேரியில் இன்று தளர்வில்லா ஊரடங்கு!

ABOUT THE AUTHOR

...view details