பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னை மதுரவாயிலில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு பாஜகவின் கலை மற்றும் கலாசாரத் தலைவியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு 300 ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி சேலைகளை வழங்கினார்.
இந்தி மொழி கற்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக 'தமிழ் எங்கள் வேலன்; இந்தி நம்ம தோழன்' எனும் வாசகம் பொருந்திய டி-சர்ட்டை வெளியிட்டு, 200 மாணவ - மாணவிகளுக்கு வழங்கினார். மேலும், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, இனிப்புகள் வழங்கி நரேந்திர மோடியின் பிறந்த நாளை கொண்டாடினார்.