சென்னை: மாநகரம் முழுவதும் மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தங்கள் வீட்டை மழை நீர் சூழ்ந்துள்ளது, தங்களுக்கு உதவி செய்யும்படி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இதனையடுத்து மீட்புப் படையினர் விஷ்ணு விஷால் வீட்டிற்குச் சென்று அனைவரையும் மீட்டனர்.
இது தொடர்பாகப் புகைப்படத்தில் இந்தி நடிகர் அமீர்கான் இருந்தார். இதனையடுத்து இந்த புகைப்படம் இந்தியா முழுவதும் பரவ தொடங்கியது. இந்தியில் முன்னணி நடிகரான அமீர்கான் தனது தாயார் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களாக சென்னையில் இருந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தமிழில் முன்னணி நடிகரான அஜித் குமார் உடன் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் நடிகர் விஷ்ணு விஷால் பகிர்ந்தார். இந்த புகைப்படம் தற்போது அஜித் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விஷ்ணு விஷால் தனது X பக்கத்தில், "எனது நண்பர்கள் மூலமாக நடிகர் அஜித் குமார் என்னைத் தொடர்பு கொண்டு எனக்கும், அமீர்கான் மற்றும் அப்பகுதியிலுள்ள வில்லா மக்களுக்குப் போக்குவரத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளார். லவ்யூ சார்" எனப் பதிவு செய்துள்ளார்.
மேலும், நடிகர் அஜித் குமார் உடல் எடை குறைத்து புதிய தோற்றத்திலுள்ள இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். இந்தி திரையுலகில் தற்போது படங்கள் நடிக்காமல் ஓய்வில் இருக்கும் அமீர்கான். தனது தாயார் ஜீனத் ஹீசைனுக்கு சென்னையில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் அதற்காகச் சென்னையில் வீடு எடுத்துத் தங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னை வெள்ளத்தில் சிக்கிய இந்தி நடிகர் ஆமிர் கான்.. படகில் சென்று மீட்ட வீரர்கள்!