தமிழ்நாட்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ள போதிலும் பல அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் வருவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. கடந்த 17ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதையொட்டி, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு தினசரி வருகை புரிந்து மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்தும் பொருட்டு அருகாமையில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு ஆசிரியர்கள் நேரடியாக சென்று, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.