இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், இன்னும் கூட ஆங்காங்கே திமுகவினரும் திமுக நிர்வாகிகளும் பேனர்களை வைப்பது தொடர்கிறது.
போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் சென்ற அதிமுக ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட பேனர் கலாசாரத்தால் மரணங்களும், விபத்துகளும் நிகழ்ந்தன.
'எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கமாட்டோம்' என்று முதன் முதலில் உயர் நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ததை அனைவரும் அறிவீர்கள்.