தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற நபர் மீது குண்டாஸ்! - goondas Act

சென்னை: ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற வழக்கில் கைதான நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற நபர் மீது குண்டாஸ்
ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற நபர் மீது குண்டாஸ்

By

Published : Jun 8, 2021, 3:34 PM IST

சென்னை கீழ்பாக்கம் அருகே கடந்த மே 17ஆம் தேதி ரெம்டெசிவர் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த அரசு மருத்துவமனை ஊழியர் உள்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள், ரெம்டெசிவர் மருந்தை ஆன்லைல் மூலம் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது.

மேலும், கைதான பாலகிருஷ்ணன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் ரெம்டெசிவர் மருந்தை பலமுறை வரிசையில் நின்று போலி ஆவணங்கள் மூலம் வாங்கி கள்ளச்சந்தையில் விற்றது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

இந்நிலையில், கைதான பாலகிருஷ்ணன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details