சென்னை :சட்டப்பேரவையில் இன்று சுற்றுலா பண்பாடு,அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தையடுத்து அமைச்சர் மா.மதிவேந்தன் பதிலுரை வழங்கினார்.
அதில், "இயற்கையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமாக நம்முடைய சுற்றுலா துறை அமைந்துள்ளது. நாட்டிலேயே சுற்றுலா பயணிகள் வருகையில் முதலிடம் பிடித்துள்ளது தமிழ்நாடு. தற்போது உள்ள சுற்றுலா தளங்களை மேம்படுத்துதல், அடிப்படை வசதிகள் செய்து தருதல் உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்துதல் பணிகளை முடித்து சுற்றுலா பயணிகள் வருகையினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.