தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தாண்டு இறுதிக்குள் பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பைகள் வழங்கப்படும் - சென்னை

டிசம்பர் மாத இறுதிக்குள் பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பைகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்க நடவடிக்கை
பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்க நடவடிக்கை

By

Published : Aug 13, 2022, 5:11 PM IST

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பள்ளி உபகரணங்களை விரைந்து வழங்க நடவடிக்கையை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்தக பைகள் வரும் டிசம்பருக்குள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதேபோல மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட சீருடைகள் செப்டம்பர் மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்க நடவடிக்கை

கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் பள்ளி திறந்த உடன் வழங்கப்படாமல், ஒவ்வொரு ஆண்டும் சில மாதங்கள் கழித்துத்தான் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு காரணம் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கொள்முதல் செய்வதற்கான பட்டியலை தயாரிக்காமல் இருப்பதே காரணம். வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உபகரணங்கள் பள்ளிகள் திறந்த உடனேயே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை அரசாணை 101, விரைவில் திருத்தப்பட்டு வெளியிடப்படும். இந்த அரசாணையை கொண்டு வரும் போது ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்கு நிதித்துறையின் அனுமதிப் பெறுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க:அமைச்சர் அன்பில் மகேஷின் வருகையின்போது ஆம்புலன்ஸ் காத்திருக்க நேர்ந்ததால் சர்ச்சை!

ABOUT THE AUTHOR

...view details