இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், தமிழறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சண்முகம், கவிஞர் காமராசு, முனைவர் இளவரசு, தமிழறிஞர் அடிகளாசிரியர் புலவர் இறைக்குறவனார், பண்டித கோபால கிருட்டிணன், பாபநாசம் குரள்பித்தன் ஆகியோரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்.
தமிழறிஞர்கள் ஏழு பேர் நூல்கள் நாட்டுடைமையாக்க நடவடிக்கை - அரசு உத்தரவு - தமிழறிஞர்கள் ஏழுபேர் நூல்கள் நாட்டுடைமையாக்க நடவடிக்கை
சென்னை: தமிழறிஞர்கள் 7 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கியதோடு, அவர்களது குடும்பங்களுக்கு பரிவு தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு
இதற்காக அவர்களது குடும்பத்துக்கு பரிவு தொகை வழங்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழறிஞர்கள் 7 பேரின் நூல்கள் அவர்களது குடும்பத்தின் ஒப்புதலுடன் நாட்டுடைமை ஆக்கப்டுகிறது. இதற்காக அவர்களது குடும்பத்துக்கு தலா 35 லட்சம் ரூபாய் பரிவு தொகையாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ''நாட்டிலேயே கல்வித்துறையில் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம்'' - அமைச்சர் செங்கோட்டையன்!