இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், “போலி பட்டியல் வணிகர்களைக் கண்டறியும்பொருட்டு அவர்களின் வியாபார இடங்களில் ஜூன் 2021 முதல் பிந்தைய சரிபார்ப்பினை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது.
பதிவுச் சான்றிதழ்களைக் கண்காணித்து நடவடிக்கை - வணிகவரித் துறை - business tax
சென்னை: வணிகர்களின் பதிவுச் சான்றிதழ்களைக் கண்காணித்துச் சட்டப்படி தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக வணிகவரித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
assembly
இதனைச் செயல்படுத்தும்விதமாக முதலில் பிப்ரவரி 2021 முதல் மே 2021வரை வழங்கப்பட்ட புதிய பதிவுபெற்ற வணிகர்களின் வியாபார இனங்களில் சரிபார்ப்பு செய்ததில் 515 இனங்களில் பதிவுபெற்ற வணிகர்கள் தங்களது வியாபார இடங்களில் இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றில் 208 இனங்களில் வணிகர்களின் பதிவுச்சான்று ரத்து செய்யப்பட்டுள்ளதோடு மீதமுள்ள இடங்களில் சட்டப்படி தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.