தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்' - தமிழ்நாடு அரசு - etv bharat

கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்
கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்

By

Published : Aug 17, 2021, 5:40 PM IST

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை கூடுதல் இயக்குநர், ஆபாஸ்குமார், உத்தரவுப்படி, காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்டாலின், பாஸ்கர் நேரடி மேற்பார்வையில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் பல குழுக்களாகப் பிரிந்து மேற்படி பகுதிகளில் கலப்பட டீசல் வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

  • கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாக மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 26,400 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த டீசல் ஏற்றி வந்த 5 டேங்கர் லாரிகள் மற்றும் 3 சிறிய ரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடத்தல் செயலில் ஈடுபட்ட 10 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதில் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கள்ள சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்
  • இதில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர் பிரிவு சாலையில் வாகன தணிக்கையின் போது அதிகாலை சுமார் 3 மணியளவில் கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்த டேங்கர் லாரியில் சுமார் 4,000 லிட்டர் அளவுள்ள கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டுநர் மதியழகன், க்ளினர் செல்வம், உரிமையாளர் இன்பராஜ் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
  • அதேபோல் பொள்ளாச்சி கே.ஜி. சாவடி எட்டிமடை கே.பி.எஸ் குடோன் அருகில் ஆகஸ்ட் 12ஆம் தேதி வாகனத் தணிக்கையில் 4,000 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த லாரி, சிறிய ரக வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் சபாபதி, செல்வ கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் சேலம் கேது நாயக்கபன்பட்டியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாகனத் தணிக்கையில் 1,350 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • அதேபோல் சேலம் சங்ககிரி முதல் எடப்பாடி ரோடு வாரி பேக்கரி முன்பு ஆகஸ்ட் 6ஆம் தேதி வாகனத் தணிக்கையில் 17,050 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த லாரி, சிறிய ரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் உரிமையாளர்களான ஆரோக்கியராஜ், கவுதம், சங்கர், பழனிசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
  • மேலும் நாமக்கல் தொட்டிப்பட்டியில் ஜுன் 25ஆம் தேதி 7,000 லிட்டர் கலப்பட டீசலை ஏற்றி வந்த லாரி ஒட்டுனர் மற்றும் உரிமையாளர் ஆனந்தராஜ், தமிழ்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
  • அதேபோல் நாமக்கல் முத்தாலப்பட்டி பைபாஸ் ரோட்டில் வாகனத் தணிக்கையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி 1,000 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். அதே தினம் சேலம் தேசிய நெடுஞ்சாலை பச்சபாளி ரோட்டில் 350 லிட்டர் கலப்பட டீசல் குறைந்த விலையில் விற்பனை செய்ய வந்த டேங்கர் உரிமையாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சிறைக் கைதிகளை நேரில் சந்திக்க மீண்டும் அனுமதி: குவிந்த பார்வையாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details