தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் சொத்துகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் - அமைச்சர் சேகர் பாபு

கோயில் சொத்துக்களுக்கு முறையான வாடகை நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற 4 கூடுதல் ஆணையர்கள் கொண்டு குழு அமைத்து இந்த மாதத்திலேயே முறையான வாடகை நிர்ணயிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

கோவில் சொத்துக்களுக்கு முறையான வாடகை நிர்ணயம் செய்ய நடவடிக்கை: அமைச்சர்
கோவில் சொத்துக்களுக்கு முறையான வாடகை நிர்ணயம் செய்ய நடவடிக்கை: அமைச்சர்

By

Published : May 4, 2022, 9:05 PM IST

சென்னை:மானியக் கோரிக்கை மீதான உறுப்பினர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, "கோயில் சொத்துக்களில் வாடகை உயர்வு ஏற்பட்டு பல இடங்களில் பலவாறாக வாடகை வசூலிக்கப்பட்டு வருவது முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து முதலமைச்சர் அறநிலையத்துறை நிலங்களுக்கான வாடகை நிர்ணயக் குழு ஒன்றை ஏற்படுத்தி, ஏற்கெனவே இந்தத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நான்கு கூடுதல் ஆணையாளர்களுடன் இந்து சமய ஆய்வாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு வியாபாரநோக்கோடு இருப்பது, வாழ்வாதாரத்திற்காக குடிபெயர்ந்தவர்கள் என இரண்டையும் கவனித்து, வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற வகையில் அதே நேரத்தில் திருக்கோயிலில் வருமானமும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும்.

நம் முன்னோர்கள் எழுதி வைத்தது போல இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற வார்த்தையின்படி கோயில் வருமானத்தை இறைவனுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஏழை மக்களுக்கான வியாபாரம் என்ற ரீதியில் எடைபோட்டு முதலமைச்சர் நியாயம் வழங்குவார். இந்த மாதத்திற்குள் அந்த பணிகள் நிறைவடையும்", எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details