சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தாம்பரம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அகஸ்தியர் தெருவில் உள்ள ஒரு கடையில், தனியார் நிறுவத்தின் தண்ணீர் பாட்டில்கள் காலாவதியானநிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த தண்ணீர் பாட்டில்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.