தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘என் மகளின் இறப்பிற்குக் காரணமானவர்களைப் பணிநீக்கம் செய்க!’ - சுபஸ்ரீ தந்தை ஆவேசம் - #bannerkilledsubasree

சென்னை: சுபஸ்ரீயின் மரணத்திற்குக் காரணமான அனைவரையும் பணிநீக்கம் செய்யவேண்டும் என அவரது தந்தை வலியுறுத்தியுள்ளார்.

subhashree father interview

By

Published : Sep 28, 2019, 10:23 AM IST

‘உச்ச நீதிமன்றம் பலமுறை பேனர் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும், அரசு அலுவலர்களின் உதவியுடன் தங்களது குடும்ப நிகழ்ச்சியை ஆடம்பரமாக வெளிப்படுத்தவும், சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர்களை மகிழ்வித்து செல்வாக்கைப் பெறுவதற்காகவும் சட்டவிரோதம் எனத் தெரிந்தும் ரோட்டில் பேனர் வைத்தனர்.

தன்னைப் பொருத்தவரை பேனர் வைக்க காரணமாக இருந்தவரே முதல் குற்றவாளி. அதற்குத் துணை நின்ற மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர், லாரி ஓட்டுநர், பேனர் அச்சிட்டவர் என அனைவரும் இரண்டாம் குற்றவாளிகளே என்றார். தன் மகளின் இறப்பிற்குக் காரணாமாக இருந்த அனைத்து அலுவலர்களும் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றார்.

நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்டத்தையும், குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளி மாநிலத்தவரையும் தனிப்படை அமைத்து சில நாட்களிலே கண்டறியும் காவல் துறை, நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தும் சுபஸ்ரீ இறப்பிற்கு காரணமானவர்கள் ஆளும் கட்சியின் துணையுடன் இருப்பதால் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். கட்சி அடிப்படையில் இல்லாவிட்டாலும் மனிதாபிமான அடிப்படையிலாவது காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.

சுபஸ்ரீ தந்தை ஆவேசம்

அதுமட்டுமின்றி, எந்த ஆளும் கட்சி பிரமுகரை வரவேற்பதற்காக பேனர் வைத்தார்களோ அவர் இன்றுவரை என் மகளின் இறப்பிற்கு வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டிலுள்ள மற்ற கட்சிகள் அனைத்தும் உயர்நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி வரும் காலங்களில் எங்களுடைய கட்சியின் சார்பில் நடத்தப்படும் எந்த நிகழ்ச்சிகளிலும் பேனர்கள் வைக்கமாட்டோம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

எங்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய திரைப்படத்துறையினர் பலரும் தங்களது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனால், ஆளும்கட்சியினர் ஏன் அறிவிப்புகள் வெளியிடத் தயங்குகின்றனர். இவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றினால் மட்டுமே வருங்காலங்களில் தேவையற்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்கமுடியும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details