சென்னை: சினிமாவில் உள்ள முக்கிய பிரிவுகளுக்கான பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய பட்டப்படிப்புகள், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடப்புக் கல்வியாண்டில் (2022 - 2023) நான்காண்டு கால பட்டப்படிப்பிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்புகள்:
- இளங்கலை- காட்சிக்கலை ( ஒளிப்பதிவு ) - Bachelor of Visual Arts (Cinematography)
- இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) - Bachelor of Visual Arts (Digital Intermediate)
- இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) - Bachelor of Visual Arts (Audiography)
- இளங்கலை - காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) - Bachelor of Visual Arts (Direction and Screenplay Writing)
- இளங்கலை - காட்சிக்கலை (படத்தொகுப்பு) - Bachelor of Visual Arts (Film Editing)
- இளங்கலை - காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) - (Animation and Visual Effects)
கல்வித்தகுதி: இதில், இளங்கலை - காட்சிக்கலை (ஒளிப்பதிவு) மற்றும் இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) ஆகிய பட்டப்படிப்புகளுக்கு மேல்நிலை (10+2) கல்வித்தேர்ச்சி (இயற்பியல் மற்றும் வேதியியல்) சிறப்புப் பாடமாக புகைப்படம் சார்ந்த தொழில் படிப்புகள் அல்லது அதற்கு இணையான படிப்புகள் அல்லது மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE) அல்லது மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் (ECE) ஆகிய பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
இளங்கலை - காட்சிக்கலை (படத்தொகுப்பு) படிப்பிற்கு மேல்நிலை (10+2) கல்வித்தேர்ச்சி (இயற்பியல் மற்றும் வேதியியல்) அல்லது சிறப்புப் பாடமாக வானொலி அல்லது தொலைக்காட்சி அல்லது உள்நாட்டு மின்னணு உபகரணங்கள் சார்ந்த தொழில் படிப்புகள் அல்லது அதற்கு இணையான படிப்புகள் அல்லது மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE) அல்லது மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் (ECE) ஆகிய பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
இளங்கலை - காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்), இளங்கலை - காட்சிக்கலை (படத்தொகுப்பு) மற்றும் இளங்கலை - காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) போன்ற பட்டப் படிப்புகளுக்கு மேல்நிலை (10+2) கல்வியில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் தகவல்களுக்கு, விண்ணப்பத்துடன் வழங்கப்படும் தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும்.