சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவின் சார்பிலும், சமூக பாதுகாப்பு துறை சார்பிலும் ஸ்டாப் சைல்ட் அப்யூஸ்(STOP CHILD ABUSE) என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை துணை ஆணையர் ஜெயலட்சுமி தொடக்கி வைத்தார்.
இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உள்ள, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவில் உள்ள 35 காவல் நிலையங்கள் மூலம் சென்னை முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்துவருகிறோம். 2, 000 ஆட்டோக்களில் பிரசுரங்கள் ஒட்டி விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பது குறித்தும், புகார் அளிப்பது குறித்தும் ஒலிப்பெருக்கியில் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.