சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில், 2022-ஆம் ஆண்டில் 91 நாட்களுக்கு மேல் 151 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்களுக்கு மேல், 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும்; 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் 'சாதனை ஊக்கத்தொகை' வழங்கப்படும்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! - சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு
பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Achievement
அதன்படி, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து பதினேழாயிரத்து நூற்று இருபத்தொன்பது பணியாளர்களுக்கு, மொத்தம் ஏழு கோடியே ஒரு லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.