சென்னை: கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த சுதா (32), கடந்த வாரம் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், லதா கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்கச் சங்கலியைப் பறித்து கொண்டு, தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளார்.
இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதைத் தொடந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் இவர்கள் யார் என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், கார்த்திக் என்கிற டாங்கி கார்த்திக் (24) மற்றும் மதன் கார்த்திக் (24) என்பது தெரியவந்துள்ளது.