சென்னை:கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்புப் பயணிகள் விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் 142 பயணிகள் வந்தனர். பயணிகளின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது அந்த விமானத்தில் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரபீயூக் (37) என்ற பயணியின் கடவுச்சீட்டை அலுவலர்கள் பரிசோதித்தனர். அப்போது அந்தப் பயணி இரண்டு ஆண்டுகளாக கேரள காவல் துறையினரால் தேடப்பட்டுவருபவர் என்று தெரியவந்தது.
அதாவது கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஹோஸ்ட்ரக் காவல் நிலையத்தில் ரபீயூக் மீது 2020ஆம் ஆண்டில் அத்துமீறி வீடு புகுந்து தாக்கி, பொருள்களைச் சேதப்படுத்தியது, ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.