புழல் சிறையில் அடைக்கபட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பல்வேறு பணிகள் வழங்கப்பட்டு அதற்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, காலணிளுக்கு பாலிஸ் செய்யும் பணியில் காலணி ஒன்றுக்கு 49 பைசா வழங்கப்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு காலணி ஒன்றுக்கு 49 பைசா அளிக்கப்பட்ட ஊதியம் 89 பைசாவாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காலணி ஒன்றுக்கு மீண்டும் பழைய கூலி தொகையான 49 பைசா வழங்கப்பட்டுள்ளது. இதானால், வியாசர்பாடியைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி பாண்டியன் என்பவர் ஊதிய குறைப்பு தொடர்பாக புழல் சிறை கண்காணிப்பாளரிடம் கேட்டபொழுது, அவர் பாண்டியனை மிரட்டியுள்ளார்.
பின்னர், பாண்டியன் இதுகுறித்து அவரது மனைவி ஸ்டெல்லாவிடம் தெரிவித்தார். உடனே ஸ்டெல்லா இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் புழல் சிறை பொதுத் தகவல் அதிகாரிக்கு மனு அளித்தார்.