தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்

இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், தான் பலிகடா ஆக்கப்பட்டதாக தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வெங்கட சிவநாககுமார் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

வெங்கட சிவநாககுமார் டிஜிபி அலுவலகத்தில் புகார்
வெங்கட சிவநாககுமார் டிஜிபி அலுவலகத்தில் புகார்

By

Published : Mar 12, 2022, 1:54 PM IST

சென்னை:அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ், அவரது குடும்பத்தினரை கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக சிபிசிஐடியினர் காவல் உதவி ஆணையர், தொழிலதிபர் வெங்கட சிவநாதகுமார் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து தொழிலதிபர்கள் வெங்கட சிவநாதகுமார், ஸ்ரீ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவாக இருந்து வரும் உதவி ஆணையர் உள்பட மற்றவர்களை தீவிரமாக தேடப்பட்டுவருகின்றனர். இதனிடையே ஜாமீனில் வெளியே வந்த தொழிலதிபர் வெங்கட சிவநாதகுமார் நேற்று டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில் சிபிசிஐடியினர் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி விசாரணை என்ற பெயரில் என்னை துன்புறுத்துகின்றனர்.

உண்மையான குற்றவாளி ராஜேஷ்தான். அவர் நாடகமாடி இந்த வழக்கில் என்னை குற்றவாளியாக்கிய சிக்கவைத்துவிட்டார். குறிப்பாக இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையேவுள்ள பிரச்சினையில், என்னை பலிகடா ஆக்கிவிட்டனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஆசிரம உரிமையாளர் கடத்திய கும்பலுக்கு போலீஸ் வலை

ABOUT THE AUTHOR

...view details