சென்னை கிழக்கு தாம்பரம், பலராமன் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்ற பாட்டில் மணி (30). இவர் மீது கடந்த 2015ஆம் ஆண்டு சேலையூர் காவல் நிலையத்தில் அடிதடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கடந்த ஆறு ஆண்டுகளாக, காவல் துறையினரிடம் சிக்காமல் பாட்டில் மணி இருந்தார்.
இந்த நிலையில், தாம்பரத்திலுள்ள வீட்டை காலி செய்துவிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்துக்கு மணி சென்றிருப்பது தெரியவந்தது. தகவலறிந்தத் தனிப்படை காவல் துறையினர், செங்கல்பட்டு சென்று மணிகண்டனை தேடி வந்தனர். திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் பாட்டில் மணி பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு சென்று அவரை மடக்கிப் பிடித்தனர்.