சென்னை, மண்ணடி, அங்கப்பன் சாலை பிளாட்பாரத்தை சேர்ந்தவர் அருண்(25). இவர் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த எட்டாம் தேதி குடிபோதையில் இருந்த அருண், அதே பகுதியைச் சேர்ந்த, இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல் துறையினர், அருணை போக்சோ சட்டத்தில் கைது செய்து, கைவிலங்கு அணிவித்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அப்பொழுது, நேற்று முன்தினம் திடீரென பின்பக்க கதவு மேல் ஏறி, அங்கிருந்த இடைவெளி வழியாக அருண் கைவிலங்குடன் தப்பி ஓடினார்.