தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TN Assembly: ஆளுநர் மாளிகை செலவீனத்தில் குளறுபடி.. யாராக இருந்தாலும் தண்டனை உறுதி என அமைச்சர் ஆவேசம்!

அட்சய பாத்திரம் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், தவறு இருந்தால் "ஆண்டவனாக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும்", தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Atchaya Pathiram scheme
அட்சய பாத்திரம் திட்டம்

By

Published : Apr 20, 2023, 7:52 AM IST

சென்னை: ஆளுநர் செலவிற்கு ஒதுக்கப்படும் நிதி மேலாண்மை குறித்து நிதி அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்து பேசினார். அப்போது பேசிய அவர், "கடந்த ஆட்சியில் நிதி துறை செயலாளருக்கு ஆளுநரின் செயலாளர் கடிதம் எழுதியதாகவும், அதில் ஆளுநர் செலவிற்கு ஒதுக்கப்படும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

மேலும் 5 கோடி செலவிற்கு கணக்கு கேட்க கூடாது என்பது ஜனநாயகத்திற்கு உடபட்டது அல்ல என்றும், ஆளுநர் செயலாளர் அனுப்பிய கோப்பில் 1 லட்சத்து 56 ஆயிரம் நிதியை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்று நிதி துறை செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவும் நிதியாண்டு முடிவதற்கு 2 மாதமே இருக்கும் போது இவ்வாறு உயர்ந்து வலியுறுத்துவதன் காரணம் என்று கேள்வி எழுப்பினார்.

கோப்பு உருவாக்காமல், நிதியமைச்சரிடம் கூறாமல், அரசுகொள்கை முடிவெடுக்காமல் நிதி செயலரே ரூ.50 லட்சமாக அதிகரித்து ஒரே கோப்பில் அன்று முடிவெடுக்கிறார். மார்ச் மாதத்திற்குள்ளாக அந்த நிதியை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை என்று மீதமுள்ள பணத்தை மாளிகை கணக்கில் சேர்த்துள்ளனர். கொள்கை முடிவு எடுக்கப்படாமலும், அமைச்சர் கையெழுத்து போடாமலும் ஆளுருக்க ஒதுக்கப்பட்ட தொகையில் அட்சய பாத்திரம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பொதுத்துறையின் கோப்புகளை எடுத்துப் பார்த்தால் கையெழுத்து, சீல் இல்லாமல் அன்றைய ஆளுநரின் செயலாளர் கடிதம் கொடுத்துள்ளார். அட்சய பாத்திர திட்டதிற்காக கட்டடத்தை கட்டி ஒரு நாள் கூட உணவு தயாரிக்கவில்லை" என்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். மேலும் புதிய ஆளுநர் பொறுப்பேற்ற பின்பு உரிய கோப்புகளில் அமைச்சர் கையெழுத்து போட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதையும் விரிவாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

அப்போது எதிர்கட்சி கொறடா, எஸ்.பி.வேலுமணி, "அட்சயப் பாத்திர திட்டம் ஆளுநர் சொல்லி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்" என தெரிவித்தார். மேலும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, "திட்டத்தை குறை சொல்லவில்லை என்றும், நிதி ஒதுக்கியதில் குளறுபடி இருப்பதை தான் நிதி அமைச்சர் விளக்கியுள்ளார் என்றார். அதோடு, பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாவும், ஆளுநராக இருந்தாலும், ஆண்டவனாக இருந்தாலும் தண்டனையை அனுபவித்து தான் ஆகவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: பாரிமுனை 4 மாடி கட்டட விபத்து: உரிமையாளர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு

ABOUT THE AUTHOR

...view details