தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை வரும் 24 ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வழக்கு ஒத்திவைப்பு  சொத்துக்குவிப்பு வழக்கு  சொத்துக்குவிப்பு  ராஜேந்திர பாலாஜி  ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு  case against Rajendra Balaji postponed  Rajendra Balaji  case against Rajendra Balaji  Rajendra Balaji case  Accumulation of assets  Accumulation of assets case against Rajendra Balaji postponed  assets
ராஜேந்திர பாலாஜி

By

Published : Sep 17, 2021, 8:50 PM IST

சென்னை:முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாகவும், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரியும் மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டார். வழக்கு பதிவு செய்வதால் எந்த பயனும் இல்லை என நீதிபதி ஹேமலதா தெரிவித்தார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி நிர்மல்குமாரை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மூன்றாவது நீதிபதியான நிர்மல்குமார் முன்பு, இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கு ஒத்திவைப்பு

ராஜேந்திர பாலாஜி தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2 நீதிபதிகள் அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு வந்தால், அந்த வழக்கை 2க்கும் மேற்பட்ட நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் என்றும், மூன்றாவதாக தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க முடியாது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 விழுக்காடு அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும், தற்போது மேல் விசாரணை துவங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று (செப்.17) நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு வரும் 20 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளதாகவும், அதுவரை விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகாமல் இருக்க அரசு விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details