சென்னை:அனைத்திந்திய நிறுவனத்தில் ஆறு மாத கால 'மாற்று மருத்துவத்தை' படித்த 61 பேர் எந்தவித சட்ட இடையூறுமின்றி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க தங்களை அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த 61 மனுதாரர்களும் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படித்துள்ளனர் என்று தமிழக அரசு அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறு மாத காலம் மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராகச் சிகிச்சை அளிக்கும் இவர்களை நம்ப முடியாது எனவும் மருத்துவ கவுன்சிலில் அங்கீகரிக்கப்படாத மற்றும் பதிவு செய்யாத மாற்று மருத்துவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவு இட்டார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு இது குறித்து சுகாதார துறை இணை இயக்குநர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பினார். எ
னவே கடந்த 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுகாதார துறை இணை இயக்குநருடன் சேர்ந்து தமிழக போலீசார் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் 5 டாக்டர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8 போலி மருத்துவர்களும், திருவாரூர் மாவட்டத்தில் 12 போலி மருத்துவர்களும், புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் 4 போலி மருத்துவர்களும், தஞ்சாவூரில் 10 போலி மருத்துவர்களும், ஓசூரில் 3 போலி மருத்துவர்களும் என மொத்தம் 72 போலி மருத்துவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து அவர்கள் பயன்படுத்திய மருந்துகள், மருத்துவ சாதனங்கள், ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெறும் எனவும் கைது நடவடிக்கை தொடரும் எனவும் தமிழக போலீசார் தெரிவித்து உள்ளனர். பத்து நாட்களில் தமிழகத்தில் மட்டும் 72 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:15 வயது மாணவி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி - பிரதமர் மோடி கொடுத்த அட்வைஸ் என்ன?